க.குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, பெப்ரவரி 1981, 1வது பதிப்பு, ஜனவரி 1979. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்).
28 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 4.50, அளவு: 21.5×14.5 சமீ.
பாடசாலையின் நிலையத்தையும் பாடசாலைக் கட்டிடத்தை மையமாகக் கொண்டு எட்டுத் திசைகளையும் அறிதல், பிரதேசத்தின் முக்கிய இடங்கள் பாடசாலையின் எத்திசையில் அமைந்துள்ளன என்பதைக் கண்டறிதல், வகுப்பறை, பாடசாலைக் கட்டிடம், பாடசாலைத் தோட்டம் ஆகியவற்றை அளத்தலும், அவற்றின் படங்களை வரைதலும், அளவுத்திட்டத்தின் அறிமுகம், ஓர் அளவுத்திட்டத்திற்கமைய வகுப்பறை, பாடசாலைக் கட்டிடம் ஆகியவற்றின் படங்களை வரைதல், கிராமத்தின் அல்லது நகரத்தின் படம் ஒன்றை அளவுத்திட்டத்திற்கமைய வரைந்து முக்கிய இடங்களைத் தூரத்திற்கேற்ப குறிப்பிடுதல், இலங்கைப் படம்- இலங்கையின் புற உருவப்படத்தை வரைதல், இலங்கைப் படத்தை கையினால் வரையப் பழகுதல், இலங்கைப் படத்தில் கிராமம் அல்லது நகரம், அது அமைந்துள்ள மாவட்டம் என்பனவற்றைக் குறிப்பிடுதல், இலங்கைப் படத்தில் மலைப்பிரதேசத்திற்கும், தாழ் நிலத்திற்குமிடையேயுள்ள (சமவெளி) எல்லைக் கோட்டை வரைதல் ஆகிய பாடங்களில் இந்நூல் பயிற்சியளிக்கின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18631).