15195 வட கொரியாவும் சர்வதேச அரசியலும்.

கே.ரி.கணேசலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

28 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 21×15.5  சமீ.

நூலாசிரியர் வட கொரியாவின் வரலாற்றுப் பின்னணி, அதன் பொருளாதாரம், இலங்கையுடனான அதன் உறவு, வட கொரியாவை மையப்படுத்திய புவிசார் அரசியல், அதில் சீனாவினதும் அமெரிக்காவினதும் பாத்திரம் என்பவற்றை மிகத் தெளிவாக இந்நூலில் விளக்கியுள்ளார். ஒரு சிறிய நாடு, புவிசார் அரசியலைத் தனது பாதுகாப்புக் கவசமாக எவ்வாறு பயன்படுத்துகின்றது என்பதற்கு வடகொரியா சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் பாதுகாப்புக் கவசத்தினால் தான் ஈராக் மீதும், லிபியா மீதும், ஆப்கானிஸ்தான் மீதும் சண்டித்தனம் காட்டிய அமெரிக்காவால் ஒரு எல்லைக்கு மேல் ஏன் வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதை இந்நூல் வழியாக தெளிவுபடுத்தியுள்ளார். கே.ரி.கணேசலிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியற் துறைத் தலைவராகப்   பணியாற்றுகின்றார். யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 10ஆவது நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

14004 கணனி ஒரு அறிமுகம் (கணனியியல் பாகம் 1): கணனி வன்பொருள்.

சின்னத்துரை சற்குணநாதன். ஜேர்மனி: கணனியியல் கல்வி நிலையம், Norderneyer Str.3, 65199, Wiesbaden வீஸ்பாடின், 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (6), 95 பக்கம், புகைப்படங்கள்,