15201 சர்வதேச உறவுகள் ஓர் அறிமுகம்.

எம்.எம்.பாஸில், எம்.ஏ.எம்.பௌசர். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 148 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-649-6.

நவீன யுகத்தில் சர்வதேச உறவுகளின் இயல்பிலும் பரப்பிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று சர்வதேச உறவுகள் என்பது அரசகளுக்கிடையிலான உறவுகளை மட்டுமன்றி ஏனைய நிறவன அமைப்புகளின் உறவுகளையும் உள்ளடக்கியதாக வளர்ச்சியடைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாதளவிற்கு சர்வதேச உறவுகளில் ஊடாடக் கூடியதான பல சர்வதேச நிறுவனங்களும் பிராந்திய அமைப்புகளும் பல்தேசியக் கம்பெனிகளும் இராணுவக் கூட்டுக்களும் அதிகளவில் தோன்றியுள்ளன. இதனால் இன்றைய சர்வதேச உறவுகள் மிகவும் சிக்கல் நிறைந்ததாக மாறியுள்ளதுடன் எந்தவொரு அரசும் அதிலிருந்து விடுபடமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.  இவ்வாறானதொரு சூழலில் சர்வதேச உறவுகளின் இயல்பினையும் போக்கினையும் அறியவேண்டியது மிகவும் அவசியமானதாகும். இந்நூல் சர்வதேச உறவுகள், நவீன அரச முறைமை, தேசிய அதிகாரம், சர்வதேச முறைமை, கெடுபிடி யுத்தம், இணக்கநிலை உறவு, புதிய உலக ஒழுங்கு ஆகிய ஏழு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Igt Casino

Content Jocuri Merkur Alte Metode Ş Depunere Superbet Casino Online Licențe Și Jurisdicții Ş Rotiri Gratuite Spre Slot Jumanji Spre Cazinoul Online Slotty Way Ici