15202 ஏ.எல்.பொருளியல் 2019 புதிய பாடத்திட்டம்-4.

வே.கருணாகரன். யாழ்ப்பாணம்: வேலாயுதம் கருணாகரன், 215 மு, நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஜீலை 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முத்திரைச் சந்தி, நல்லூர்).

viii, 120 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ.

பரீட்சை நுட்பங்கள், அறிவுறுத்தல்கள், குறிப்புகள் கொண்ட இரு அலகுகள் அடங்கியுள்ள இந்நூலின் 5ஆம் அலகில் பேரினப் பொருளாதார நோக்கங்கள்-பிரச்சினைகள்-கொள்கைகள், தேசியக் கணக்கீட்டு முறைகள், உற்பத்தி அணுகுமுறை-பல்கணிப்பீட்டுப் பிரச்சினைகள், உற்பத்திமுறைக் கணிப்பீடு-எண்ணக்கருக்கள், வருமானமுறைக் கணிப்பீடு-எண்ணக்கருக்கள், செலவுமுறைக் கணிப்பீடு-எண்ணக்கருக்கள், தேசிய கணக்கீட்டின் முக்கியத்துவம்-அதன் வரையறைகள் (பசுமைத் தேசியக் கணக்கு) ஆகிய பாடங்களும்,  6ஆம் அலகில் பேரினப் பொருளாதார சமநிலை, மொத்தச் செலவின்/கேள்வியின் கூறுகள், பேரினப் பொருளாதார சமநிலை நிர்ணயம், பேரினப் பொருளாதார சமநிலை மாற்றம் ஆகிய பாடங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளதுடன் பயிற்சி வினாக்களும் விடைகளும் இறுதியில் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

8892 வேலணையூர் பண்டிதை த.வேதநாயகி-ஆக்கங்கள், ஆராய்ச்சி.

சரவணமுத்து கந்தவேள் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: த.வேதநாயகி நூற்றாண்டு விழாக் குழு, கஸ்தூரி திலகம், இல. 28/1, நாவலடி ஒழுங்கை, திருநெல்வேலி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (யாழ்ப்பாணம்:  பாரதி பதிப்பகம், இல.430, கே.கே.எஸ். வீதி).

10103 பதுவைப் பதியரான புனித அந்தோனியாரைக் குறித்து மன்றாட்டு பிரார்த்தனை.

புனித அந்தோனியார் தேவாலயம். கொழும்பு 13: புனித அந்தோனியார் ஆலயம், கொச்சிக்கடை, 1வது பதிப்பு, 1985.(அச்சக விபரம் தரப்படவில்லை). 34 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 13.5×10 சமீ. 15.08. 1195 ஆம்