7449 சமாதானத்திற்கான எனது எண்ணம்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம். கொழும்பு: விழுது, Centre for Human Resource Development, 1வது பதிப்பு, மார்ச 2007. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).

viii, 87 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 22×14.5 சமீ.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், பிரித்தானிய தூதராலயத்துடன் இணைந்து சமாதானத்திற்கான காட்சிப்படுத்தல்களும் குரல்களும் என்ற திட்டத்துக்கு உருவம் கொடுத்துள்ளன. யுத்தத்தின் அவலங்கள் பற்றியும், அதற்கூடாக ஒரு மாறுபட்ட சமூகத்தைப் பற்றிய நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கக்கூடிய பன்னிரண்டு புகைப்படங்களைப் பற்றிய தமது உணர்வுகளைத் தத்தம் தாய்மொழியில் சிறுவர்களை எழுதவைத்து அவற்றை நூலுருவில் மும்மொழியிலும்  (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளனர். My thought for peace (ஆங்கிலம்), சாமய சந்தகா மகே சித்துவலி (சிங்களம்) ஆகிய தலைப்புகளில் இந்நூல் மும்மொழிநூலாக வெளியிடப்பெற்றுள்ளது. வடக்கு-கிழக்கின் யுத்தசூழலில் வாழும் சிறுவர்களைப் பகைப்புலமாகக் கொண்ட காட்சிப் படிமங்களின் பிரதிபலிப்பாக இப்புகைப்படங்கள் இருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45082).

ஏனைய பதிவுகள்

100 percent free Casino games Enjoy Now

Content Aren’t able to find that which you looking? We have found step three greatest casinos Become familiar with our big gambling enterprises OnlineCasino.co.za suggests