15235 சமாதான தீபம்: ஓராண்டு நிறைவு விழா 2020.

ஜானகி தர்மஜீலன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: சமாதானதீபம் மலர்க்குழு, வட இலங்கை சமாதான நீதவான் சங்கம், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: லக்ஷாஅச்சகம், 41/8, முருகமூர்த்தி வீதி, வண்ணார்பண்ணை).

xvi, 120 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 1000., அளவு: 25×18 சமீ.

வட இலங்கை சமாதான நீதவான் சங்கம் 21.09.2018 அன்று ஆரம்பிக்கப்பட்டு, அதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. சமாதானமும் நல்லிணக்கமும் தொடர்பான கருத்துக்களைச் சுமந்துவரும் கட்டுரைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரித்தல்: தடைக் காரணிகளும் உளத்தாக்கமும் (ஜே.இராசநாயகம்), அரச காணிகள் பகிர்ந்தளிக்கும் சட்டங்கள் (சி.பாக்கியராசா), குற்றவியல் வழக்குகளில் பிணை வழங்கல் ஓர் அறிமுகம் (மோ.ரமணன்), இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்டமும் கள அனுபவமும் (சு.ஜீவசுதன்), தேசவளமைச் சட்டமும் அதன் ஏற்புடைமையும் (ஜானகி தர்மஜீலன்), குறள் போற்றும் தனிமனித ஒழுக்கம் (வி.பவநேசன்), யாவரும் கேளீர் (நா.பார்த்திபன்), தகைமைப் பண்பினை வெளிப்படுத்தும் 21ம் நூற்றாண்டிற்கான திறன்கள் (மு.வரதராஜன்), பிள்ளைகளும் மனநல பொருத்தப்பாடும் (சரோஜினி நாகராசா), சமாதானம் ஒரு பன்முகப் பார்வை (ஞானசக்தி கணேசநாதன்), இலங்கையில் பேச்சு மற்றும் கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரமும் அதற்கான சட்ட ஏற்பாடும் (கி.தர்மஜீலன்), சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் (சி.மனோகரன்), வன்னியின் பூர்வீகம் (ஞா.ஜெகநாதன்), சமாதான நீதவான்களின் நியமனங்களும் கடமைகளும் (தா.அரியரத்தினம்), Peace Education promotes everyone for the Natural life of activity (வரதராசா சசிகுமார்), ஆகிய துறைசார் அறிஞர்களின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. நூலின் இறுதியில் கௌரவம் பெறும் அங்கத்தவர்கள் விபரங்கள் விரிவான வாழ்க்கை/பணிக் குறிப்புடன் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Kostenlose Online

Content Warum Online – whisker jones Spielautomat Power Of 2 How To Securely And Efficiently Access Your Gaming Profits Wichtige Gaming Top Casinos Es ist