15249 கல்வி நிர்வாக முறைமைகள்.

ந.அனந்தராஜ். வல்வெட்டித்துறை: ஈ-குருவி டொட்.கொம்., தெணியம்மை, 1வது பதிப்பு, மே 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

xi, 162 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-41846-2-6.

தமிழ்மொழி மூல மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்தலையும் அவற்றிற்கான தீர்வுகளைக் காண உதவுதலையும் நோக்கமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. பாடசாலை நிர்வாக முறைமைகள்-ஒரு பகுப்பாய்வு, கல்வி அபிவிருத்திக்குத் தடையாக இருந்த காரணிகள், விடய ஆய்வு மூலம் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், வினாத்தாள்களைத் தயாரிக்கும் நுட்பங்கள், தலைமைத்துவம் சார்ந்த எண்ணக்கருக்கள், கல்வி நிர்வாகத்தில் அறிந்திருக்கவேண்டிய விடயங்கள், இலங்கையில் கல்வி தொடர்பான சட்டங்கள், நோக்கங்களையும் குறிக்கோள்களையும் தீர்மானித்தல் ஆகிய எட்டு இயல்களாகப்  பிரிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு பகுதியும் கல்வி முகாமைத்துவம் பற்றிய கருத்துக்களையும் பாடசாலை மற்றும் தனிநபர் நிர்வாக முறைகள் தொடர்பான விளக்கங்களையும் முன்வைக்கின்றன. மேலும் இதில் அடங்கியுள்ள தலைமைத்துவம் தொடர்பான கட்டுரையானது ஒரு நபரின் நிர்வாகத்தில் எவ்விடத்தில் தவறு விடக்கூடும் என்பதையும் பறைசாற்றி நிற்கின்றது. கல்வி முகாமைத்துவம் தொடர்பாகவும் நிர்வாகம் தொடர்பாகவும் அறிந்துகொள்ள விரும்புவோர்களுக்கு இந்நூலானது ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைகின்றது.

ஏனைய பதிவுகள்

Mastercard Casino

Content Njut Från Bonusen Utan Insättning Siru Mobile Casinon Hur Funka European Jackpot Spel Före din säkerhet, så erbjuder även dessa utländska casinon inregistrering tillsamman