15298 கண்டிராஜன் ஒப்பாரி.

முருகு தயாநிதி (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: கலைப்பூக்கள் கலைக் கழகம், 1வது பதிப்பு, 2019. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி). 

x, (2), 83 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-43173-2-1.

இந்நூலில் கண்டிராஜன் ஒப்பாரி, ஆய்வுப் பதிப்புரையுடன் கூடியதாக தொகுக்கப்பட்டுள்ளது. ஒப்பாரியின் அச்சுப் பிரதிகள் அருகிவிட்ட நிலையில் இந்நூலாசிரியர், சிதைந்த நிலையில் கிடைத்த ஒரே ஒரு பிரதியை வைத்துக்கொண்டு, வாய்மொழி மரபாகப் பேணி வந்த பெண்களைக் கொண்டு, சிதைவால் உண்டான இடைவெளியை நிரப்பிப் பதிப்பித்துத் தந்துள்ளார். கண்டியில் வெவ்வேறு காலங்களில் ஆட்சி புரிந்த கண்டி அரசர்கள் மேல் பாடப்பட்டுள்ளபோதிலும், கண்டி அரசன் ஒப்பாரியில் சுட்டப்பெறும் கண்டியரசன் கண்டிராச்சியத்தின் கடைசி மன்னனான ஸ்ரீ விக்கிரமராசசிங்கன் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அவ்வரசன் ஆங்கிலேயர்களால் சிறைப்பிடிக்கப்பட்டமையே இந்த ஒப்பாரி பாடுவதற்குக் காரணமானது.

ஏனைய பதிவுகள்

Bezpłatne Spiny Bez Depozytu 2023

Content Odnajdź Przewagi Mobilnego Kasyna Spinbounty!: Darmowe spiny w automacie 777 Gems Do 2800 Złotych Reload Nadprogram Spośród pięćdziesiąt Free Obrotami W całej Bonusie Winota