15330 ஏ.எல். 1997 தமிழ் புதிய பாடத் திட்டத்திற்கான உரைநடைத் தொகுப்பு.

எஸ்.எஸ்.ஆனந்தன். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு). 

(4), 116 பக்கம், விலை: ரூபா 90.00, அளவு: 22.5×14.5 சமீ.

1996 முதல் க.பொ.த. உயர்தர வகுப்பிற்கான புதிய பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இடம்பெறுவது இவ்வுரைநடைப் பகுதியாகும். இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் மாணவர்களின் பயிற்சிக்கு உகந்ததென தேர்வுசெய்யப்பட்டவையாகும். இலக்கியச் சுவை (சுவாமி விபுலானந்தர்), கல்வி (வி.கலியாணசுந்தர முதலியார்), தமிழர் கொள்கை (மறைமலை அடிகள்), திருத்தொண்டர் பெரியபுராண வசன முகவுரை (ஆறுமுக நாவலர்), தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள் (பாரதியார்), மகாகவி பாரதியார் (வ.ராமசாமி), ஆசிரியரை அடைந்தது (உ.வே.சாமிநாதையர்), தமிழும் பிறமொழியும் (பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை), பண்பாடு (இராஜாஜி), ஓய்வு நேரம் (சி.என்.அண்ணாதுரை), தம்பிக்கு (மு.வரதராசன்), பாட்டும் ஓசையும் (வி.செல்வநாயகம்), பகீரதப் பிரயத்தனம் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை) ஆகிய தலைப்புக்களில் இவை தேர்ந்து தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Winspark België Officiële webste

Grootte Advies afgelopen WinsPark Casino WinsPark Gokhuis klachten Overeenkomstig u onderzoeksprognoses van adviesbureau H2 Gambling Capital industry zouden u nettowinst va online raden om 2025