15351 ஆரோக்கியத்தில் திருமந்திரம் (பாகம்-1).

கா.வைத்தீஸ்வரன். தெகிவளை: கா.வைத்தீஸ்வரன், ஆற்றுப்படுத்தல் நிலையம், 7, அல்பேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2018. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

104 பக்கம், விலை: ரூபா 325., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-44396-6-5.

இந்நூலில் கடவுள் வாழ்த்து (பசிக்குச் சோறு பரமன் பூசை), யாக்கை நிலையாமை, அன்பு செய்வோம், இல்லறம் நல்லறமாகும், இறையருள் விதித்தது இல்லற வாழ்வு, மூச்சுக்காற்று முதுமையைத் தடுக்கும், மூச்சுப் பயிற்சியின் சூட்சுமம், ஊன் உடம்பு ஆலயம், உள்ளம் பெரும் கோயில், உடம்பினுள் உத்தமன், உத்தமன் கோயில் எமது உடம்பாகும், அளவாக உண்ணத் தெரிந்துகொள்வோம். மந்திரம் என்பது மனதில் உதிப்பது, தக்கார்க்குச் செய்தலே தருமம், தானச் சிறப்பு, சிவாயநம-பொன்னான மந்திரம், நாளாந்த வழிபாடு, மனதை ஒன்றுகுவிக்கக் கற்றுக்கொள்வோம், தியானம் செய்யத் தேகத்திற்கு அழிவில்லை, பிராணாயாம முடிவு பூரண சமாதி, சிவன் அருள் சித்திக்க, வாசி யோகம்-தியானம் செய்யும் முறைகள், இறைவன் இருக்கும் இடம் இருதயம், அசபை (ஓங்காரம் மானசீகமாக உச்சரிப்போம்), வாழ்வியலுக்கு வழிகாட்டும் அருமருந்தான கருத்துக்கள், கல்வியின் முக்கியத்துவம், உயர்குணம் ஆகிய 27 தலைப்புகளின்கீழ் திருமந்திரத்தில் காணப்படும் ஆரோக்கியம் சார்ந்த கருத்துக்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. சுகநலக் கல்வியாளரான நூலாசிரியர் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். ஆரோக்கியம் தொடர்பான 25 நூல்கள் வரை எழுதியுள்ளவர்.

ஏனைய பதிவுகள்

Die Besten Echtgeld Casinos

Content Seit dieser zeit Zu welchem zeitpunkt Existiert Es Erreichbar Wette Bedeutet: Einlösen, Das rennen machen, Auszahlen Eintragung Ist Reibungslos Betandplay Spielbank In Verbunden Casinos