15353 மரணத்தை வருவிக்கும் முப்பொருள்கள்.

கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, புலவரகம், மயிலணி, 1வது பதிப்பு, 1979. (யாழ்ப்பாணம்: திருமகள் அழுத்தகம், சுன்னாகம்).

(4), 12 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18.5×12.5 சமீ.

மனிதகுலத்துக்குக் கேட்டையும், பேராபத்தையும் விளைவிக்கும் மது, மாமிசம், புகையிலை என்னும் முப்பொருள்கள் பற்றி விஞ்ஞானிகள் வைத்தியர்கள், பேராசிரியர்கள் முதலானோர் கூறிய கருத்துகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. மேற்கூறப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்துவோர் புற்றுநோய், இரத்தாசய நோய் முதலிய கொடிய நோய்களுக்குள்ளாவர் என்பது அவர்களது கூற்றுக்களால் உணரப்படுவதை புலப்படுத்துகின்றார். ‘மது’ பற்றி 25 பெரியார்களின் கருத்துரைகளும், ‘மாமிசம்’ பற்றி 21 பெரியார்களின் கருத்துரைகளும், புகையிலை மற்றும் சிகரற் பற்றி 22 பெரியார்களின் கருத்துரைகளும் இதில் உள்ளடங்குகின்றன.

ஏனைய பதிவுகள்

17392 அரச உத்தியோகத்தர்களுக்கான EB வழிகாட்டி.

ஓ.எம்.ஜாபீர், எம்.எல்.அப்துல் காதர், றிஸ்வான் சலாஹுதீன். உடத்தலவின்ன: House of Chemistry Publications, 11/A, கலதெனிய, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (மாத்தளை: ஸல்காலிங்க் அச்சகம், இல. 10, பிரதான வீதி).