எஸ்.சிவானந்தராஜா. பண்டத்தரிப்பு: எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், சங்கானை).
vi, 64 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 25×17 சமீ.
இந்த நூலில் 1958 முதல் 2013 வரையிலான காலப் பகுதிவரை இடம்பெற்ற சுமார் 100 கலை நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வுகளில் பங்குகொண்ட பல மூத்த, இளம் கலைஞர்களையும் ஆசிரியர் இனம்கண்டு இந்நூலில் விபரித்துள்ளார். மேலும் 1970-2013 காலப்பகுதியில் இடம்பெற்ற 32 அரங்க நிகழ்வுகளின் அரங்கேற்ற மலர்களையும் இங்கு ஆவணப்படுத்தியிருக்கிறார். நுண்கலைத்துறையில் ஆய்வுசெய்வோருக்கு இதுவொரு முக்கிய வரலாற்று ஆவணமாகும்.