சபா அருள் சுப்பிரமணியம். கனடா: தமிழ் பூங்கா, 3001, மார்க்கம் வீதி, இல.21, ஸ்கார்பரோ, ஒன்ராரியோ MIX 1L6, இணை வெளியீடு, சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2020. (சென்னை 600034: ஸ்கிரிப்ட் பிரின்டர்ஸ்).
xx, 332 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 400., அளவு: 26×20 சமீ., ISBN: 978-1-9994522-2-3.
‘மாதகலானின் பாடிஆடு பாப்பா’ என்ற அட்டைப்படத் தலைப்புடன் இந்நூல் வெளிவந்துள்ளது. பாலர் பாடல்கள் (30 பாடல்கள்), சிறுவர் பாடல்கள் (50 பாடல்கள்), கதைப் பாடல்கள் (11 கதைப் பாடல்கள்), மாணவர் பாடல்கள் (44 பாடல்கள்), தமிழ் மரபுத் திங்கள் பாடல்கள் (7 பாடல்கள்), கனடா 150 (8 பாடல்கள்), தமிழ்மலர் பாடல்கள் (21 பாடல்கள்), பாடி ஆடு பாப்பா (32 பாடல்கள்), தங்கக் கலசம் (18 பாடல்கள்), பாடலும் ஆடலும் (30 பாடல்கள்), பாச்செண்டு (15 பாடல்கள்) ஆகிய பதினொரு பிரிவுகளின் கீழ் 266 பாடல்களை இந்நூலில் கவிஞர் மாதகலான் – சபா அருள் சுப்பிரமணியம் அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார்.