15428 உத்தமன் கதைகள்: வாசிப்பு நூல்- ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கானது.

சபா.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: கல்விக் கதிர் வெளியீட்டகம், 906/23, பருத்தித்துறை வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2013. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ்).

v, 6-48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200.00, அளவு: 25×18 சமீ.

இளைப்பாறிய கல்விப் பணிப்பாளரான இந்நூலாசிரியர், உத்தமன் என்னும் ஆறு வயதுச் சிறுவனை மையமாகக் கொண்டு மாணவர்களை நல்வழிப்படுத்தும் பல சிறந்த பண்புகளை எடுத்துக்காட்டுகின்ற ஒழுக்கத்தை வலியுறுத்தியுள்ளார். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை போன்ற நீதி நுல்களில் பொதிந்துள்ள சிறந்த கருத்துக்கள் ஆங்காங்கே இக்கதைகளில் காட்டப்படுகின்றன. சிறுவர்களிடையே விருத்தி செய்யப்படவேண்டிய தமிழர் பண்பாடுகளையும் நல்லொழுக்க வாழ்க்கை முறையையும் அறிந்துகொள்ள இந்நூலில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. உத்தமன் கதை, யாவருக்கும் அன்பு காட்டும் உத்தமன், உத்தமனின் நற்பழக்கங்கள், நன்றி மறவாமை, கல்வியில் அக்கறையான உத்தமன், உயிர்களைக் காத்த உத்தமன், சாரணீய தொண்டனாகிய உத்தமன், சாரணீய சேவையில் உத்தமன், உயிர் காத்த உத்தமன், சமூக சேவையில் உத்தமன், சட்டங்களை மதிக்கும் உத்தமன், கல்விச் சுற்றுலா சென்ற உத்தமன், மூத்தோரை மதிக்கும் உத்தமன், உத்தமனின் உறுதிக் கூற்று ஆகிய 14 கதைகளை ஆரம்பக் கல்வித் திட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற பொருளறிவை விருத்திசெய்தல், செயற்றிறனை விருத்திசெய்தல், கலை கலாச்சார பண்புகளை விருத்திசெய்தல், நல்லொழுக்கம் வளர்ச்சியுறுதல், தேசிய சமூக பண்புகள் விருத்தியுறுதல், உடல் வளர்ச்சியுறுதல் ஆகிய ஆறு குறிக்கோள்களில் மாணவர்களை விருத்தி அடையச் செய்வதை நோக்காகக் கொண்டு எழுதியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Free online Slots

Content 88 fortunes pokie machine – Top ten The brand new Totally free Harbors Totally free Revolves And you may 250,000 Coin Jackpot Bonus Features