15444 நண்பர்கள்: சிறுவர் கதைகள்.

யோகராணி கணேசன், கனிசா கணேசன், கஷ்வினி கணேசன், கேவின் கணேசன். வவுனியா: கணேசன் பதிப்பகம், 221/2, நேரிய குளம் வீதி, புதையல் பிட்டி, நெளுக்குளம், 1வது பதிப்பு, ஆனி 2020. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250.00, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-96118-1-8.

புலம்பெயர் தமிழரின் மூன்றாம், நான்காம் தலைமுறையினரை மனங்கொண்டு நோர்வேஜியன் மொழிச் சிறுவர் கதைகளைத் தழுவி தமிழில் எழுதப்பட்ட ஐந்து சிறுவர் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவை சிறுவனும் தானியங்கியும், ஒரு காட்டுப் பயணம், இரண்டு நண்பர்கள்,  எனக்கு உங்களின் மேல் எவ்வளவு பாசம் இருக்கிறது என்று தெரியுமா? எதிரிகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. திருமதி யோகராணி கணேசன் தனது பிள்ளைகளான கனிசா, கஷ்வினி, கேவின் ஆகியோரின் பங்களிப்புடன் இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்நூலுக்கான சித்திரங்களை கனிசா, கஷ்வினி ஆகியோருடன் அவர்களது சகோதரர் கேவினும் இணைந்து வரைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

12081 – நாகதம்பிரான் மான்மியம்.

த.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: த.சுப்பிரமணியம், பாக்கியவாசம், சித்தன்கேணி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1963. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்). 47 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12.5 சமீ. நாகர்களின் வரலாறு, நாக வழிபாட்டின் மகிமை,