செபமாலை அன்புராசா. முருங்கன்: முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசெம்பர் 2019. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம்).
(2), 16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350., அளவு: 14.5×20.5 சமீ., ISBN: 978-955-4609-08-2.
சிறுவர்கள் உளநலத்துடன் வாழ்வதற்குரிய நல்ல சூழல்கள் இருப்பினும், இவர்கள் பல்வேறுபட்ட நெருக்கீடுகளுக்கு மத்தியில் இன்று வாழ்ந்து வருகிறார்கள். நம் சிறுவர்களில் ஒரு பகுதியினர் எதிர்பார்க்காத வகையில் துன்புறுத்தல்களுக்கும் வன்முறைச் சூழ்நிலைகளுக்கும்; உள்ளாக்கப்படுகிறார்கள். சில வேளைகளில், வேலியே பயிரை மேய்கின்ற நிலைமைகளையும் நாம் காணமுடிகின்றது. எனவே இப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளில் சிறுவர்கள் விழிப்புடனும் விவேகத்துடனும் நடந்துகொள்வதும், நடந்துகொள்ளச் செய்வதும் அவசியமானது. அதனையே இக்கதை கோடிட்டுக் காட்டிநிற்கின்றது. சித்திரக் கதை என்னும் வடிவம் கதைகளையும், அவற்றில் பொதிந்திருக்கும் சேதிகளையும் பிள்ளைகளுக்கு எளிதாகக் கடத்தக்கூடிய ஓர் ஊடகமாக அமைந்திருப்பதோடு பிள்ளைகளின் கற்பனை விரிவடைந்து சிறகடித்துச் செல்வதற்குகந்த பாதையையும் கோடிட்டுக் காட்டுகின்றன.