15451 சிறுவருக்கு விபுலானந்தர்.

திமிலை மகாலிங்கம். மட்டக்களப்பு: தேனமுத இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65 லேடி மன்னிங் டிரைவ்).

iv, 52 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 19.5×13.5 சமீ.

தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாக் கொண்டாடி மகிழ்ந்து நன்றிப் பெருக்கில் நனைந்து இன்புறும் இவ்வாண்டில் (1992) சிறுவர் சமுதாயத்துக்காக சிறுவருக்கு விபுலானந்தர் என்னும் இந்நூலை வெளியிட்டுள்ளனர். சுவாமி விபுலானந்தர், கல்வியும் வழிபாடும், விளையாட்டுப் பிள்ளை, செய்யும் தொழிலே தெய்வம், முதல் தமிழ்ப் பேராசிரியர், பூமித்தாயின் இனிய மகன், உயரும் வழி, மகனின் கடமை, அன்னையின் வார்த்தைகள், பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும், தந்தையின் கடமை, கல்வியே கருந்தனம், பெண்மைக்கு மதிப்பு, மதபேதமற்ற மனிதர், உயர்ந்தவை எண்ணுதல், பசி தீர்த்த பண்பாளன், குருபக்தி, அன்பின் உறைவிடம், பலன் கருதாத சேவை, பேச்சு வன்மை, புகழ் பூத்த புனிதன், மற்றவரை மதித்தல், இருவகை உயர்வுகள், அறிஞர் தலைவன், அழகு மொழியினர், இறைவன் விரும்பும் இன்மலர், உருண்டையான பூ என்ன பூ, கொள்கை வீரர், யாழ் நூல் என்பது என்ன? விபுலாநந்தர் விட்டுச் சென்றவை ஆகிய முப்பது சிறு அத்தியாயங்களின் வழியாக விபுலாநந்தர் பற்றிய வாழ்வும் பணிகளும் இந்நூலில் சிறுவர்களுக்கேற்ற முறையில் எளிமையாகச் சொல்லப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்

Jack Get the facts Hammer Slot

Posts How to Earn At the Backup Cats Slot Happy Dollar Position Where you could Put A real income To the Pompeii Position? Summary To