15456 கூடல் (பரல் 2): கண்ணகி கலை இலக்கிய விழா மலர் 2013.

கதிரவன் த.இன்பராசா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கண்ணகி கலை இலக்கியக் கூடல், 45A, பிரதான வீதி, சின்ன ஊறணி, 1வது பதிப்பு, 2013. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).

92 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சமீ.

2013 ஜீன், 15 முதல் 16 வரை கண்ணகி கலை இலக்கியக் கூடல் அமைப்பினரால் ஆலையடி வேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் ஒழுங்குசெய்யப் பெற்ற கண்ணகி கலை இலக்கிய விழாவினையொட்டி வெளியிடப்பெற்ற 2013க்கான ஆண்டு மலர் இது. இதில் முரசம் (கதிரவன் த.இன்பராசா), தொடக்கவுரை (செங்கதிரோன்-த.கோபாலகிருஷ்ணன்), தலைமையுரை-மட்டக்களப்பில் கண்ணகி இலக்கிய ஆய்வுகள் செல்ல வேண்டிய திசைகள் (சி.மௌனகுரு), இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறவரும் செய்திகளும் இன்றைய தமிழ் சூழலில் அவற்றின் பொருத்தப்பாடும் (அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் ஆற்றிய உரையின் சுருக்கம்), துறை நீலாவணைக் கண்ணகை அம்மன் கோவில் (துறையூர் க.செல்லத்துரை), சிறப்புரை-பெண்மையின் மேன்மைக்கும் சமூக நீதியின் நிலைபேற்றிற்கும் ஓர் அடித்தளமாகச் சிலப்பதிகாரம்: ஓர் இலக்கியம் சார் சமூகவியல் நோக்கு (சந்திரசேகரன் சசிதரன்), சிலப்பதிகாரத்தில் கண்ணகி (க.இரகுபரன்), கண்ணகி வழக்குரையில் கண்ணகி (வ.குணபாலசிங்கம்), சிலம்பு கூறலில் கண்ணகி (க.ஐயம்பிள்ளை), கண்ணகி இலக்கியங்களில் கண்ணகி: பெரிய எழுத்து கோவலன் கதை எனும் இலக்கிய நூலில் கண்ணகி (றூபி வலன்றீனா பிரான்சிஸ்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்