தென் புலோலியூர் பரா.ரதீஸ். யாழ்ப்பாணம்: அகில இலங்கை இளங்கோ கழகம், தென் புலோலி, 1வது பதிப்பு, நவம்பர் 2003. (பருத்தித்துறை: S.P.M.ஓப்செட் பிரின்டர்ஸ், வீ.எம்.வீதி).
xx, 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று முதல் வகுப்பில் சித்தியெய்தியவர் பரா.ரதீஸ். அங்கு தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றிய வேளையில், தனது கவிதை ஆளுமையை வெளிக்காட்டும் வகையில் கன்னிமுயற்சியாக தனது 20 கவிதைகளைத் தொகுத்து இந்நூலை ஆக்கியிருக்கிறார். ரதீசின் சமூக அக்கறையையும், தீமைகளைக் கண்டு பொங்கியெழும் உள்ளத்தையும் இக்கவிதைகள் பிரதிபலிக்கின்றன. அனுபவங்களும் உணர்வுகளும் எண்ணங்களும் மொழிப் படிமங்களால் சொற்சிற்பங்களாக வார்க்கப்பட்டுள்ளன. நிம்மதிக்கென்ன விலை, நடப்புக்கள், விடியலைத் தேடி, அவன் ஒரு மெழுகுவர்த்தி, எனது நாயகர்கள், வாழ நினைத்தால், தொலைத்துவிட்டோம், வேண்டாம் கலிங்கப்போர், ஒரு கவிஞனின் கனவு, க(வி)தையின் சுவைஞர், இதனைப் பாடுங்கள், பொய்மை, பிள்ளைமனம், பாவையின் பதைப்பு, அந்தணர் எவர் இங்கே? தேடுகிறாள் மனிதத்தை, எனக்கென்றவளுக்கு, மனசோடு, வஞ்சகப் பிணம், அக்காளை ஆகிய 20 கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. இந்நூலுக்கான அறிமுகவுரையை தா.ஜெயவீரசிங்கமும், அணிந்துரையை துரை. மனோகரனும், முன்னுரையை இ.முருகையனும், வெளியீட்டுரையை வே.நந்தகுமாரும் வழங்கியுள்ளனர்.