15479 இரண்டும் ஒன்று.

எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா. கிண்ணியா 7: பாத்திமா றுஸ்தா பதிப்பகம், 46/3, பெரியாற்று முனை, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xiv, 15-113 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-0715-24-4.

குருநாகல், பானகமவைச் சேர்ந்த கவிஞர் எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா எழுதிய 84 கவிதைகளின் தொகுப்பு இது. ஈழத்துக் கவிதை உலகிற்கு இவர் புதியவரானாலும், இவரது கவிதைகளில் முதிர்ச்சித் தன்மை மிளிர்வதை அவதானிக்க முடிகின்றது. கல்விப்பணியில் தன்னை ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராக எனப் பல்வேறு தளத்திலும் வளர்த்துக் கொண்டவர். இவரது கவிதைகளில் குடும்ப, சமூக, சர்வதேசப் பார்வைகள் எனச் செறிந்திருப்பதை பரவலாகக் காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்

17898 ஒரு சமூக சிற்பியின் பட்டறிவு பகிர்வு.

என்.கே.துரைசிங்கம். பிரான்ஸ்: அறவழி நண்பர்கள் வட்டம், தென்மர் வெளியீடு, இல. 50 rue du mont cenis, 75018,  Paris, 1வது பதிப்பு, பெப்ரவரி 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693,