15493 உணர்வுச் சோலை.

மு.இ.பாத்திமா றுஷ்தா. திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2016. (திருக்கோணமலை: A.R.T. அச்சகம், 82, T.G. சம்பந்தர் வீதி).

xix, 74 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-4628-37-3.

இலங்கையில் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்த ஈழ விடுதலைப் போராட்டம் 2008களில் மௌனிக்கப்பட்ட பின்னர் 2010களுக்குப் பின்னர் காத்தான்குடியிலிருந்து எழுதப் புறப்பட்டவர் மு.இ.பாத்திமா றுஷ்தா. இத்தொகுப்பிலுள்ள 46 கவிதைகளும் தான் சார்ந்த சமூகத்தில் காணப்படும் அழிவுகளையும் அவலங்களையும் ஏதொவொரு வகையில் பேசுகின்றன. இவை ஈரமில்லா நெஞ்சம், அகதி வாழ்வு, அனாச்சார உலகம், அன்றும் இன்றும், உணர்வுச் சோலை, சீதனமா-மஹரா, துயில், நம்பிக்கை, பட்டப்படிப்பு, பதற்றம், பஸ் பிரயாணம், பெண்ணின் அவலம், மழைக்காலம், மழையுடன் ஒரு குளியல், மறுமை, மனிதாபிமானம், விடியலைத் தேடி, விரைந்திடும் மறுமை, விவாகரத்து, தனிமையின் தவிப்புகள், மின்னல், இளவேனிலே வா, உன் கண்ணில் நீர் வழிந்தால், கடலோரக் காட்சி, மாதராய் பிறந்திட, சமையலறை, தொழிலாளர்கள், தெருக்கூத்து, நிழலை வேண்டி, இறையருள், கனவுகள் கோடி, இதயம் தாங்குமா?, பிறந்த மண், மூச்சுடன் ஒரு நிமிடம், மின்சாரத்தின் அருமை, நவீன சாதனங்களின் சாதனை, மனச்சாட்சிக்கோர் மடல், புன்னகை, அக்கிரமத்தின் உச்சம், மனக் குழப்பம், உறவுகள், குழந்தைக்கேங்கும் தாய், கண்ணீர், மகளிர் தினம், சுயமரியாதை, சாதனை, நடந்து செல், பிரிவு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Plinko Salle de jeu

Aisé Meilleurs Salle de jeu Un brin Pour Conserve Mini Avec dix, : Vidéo Soirée pour Devinette Nos Casinos Du Appoint Profond Dans Bien Amuser