15511 ஒரு வானில் இரு நிலவுகள்.

மூதூர் முகைதீன் (இயற்பெயர்: அ. மீரா முகைதீன்). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2018. (திருக்கோணமலை: பென் விஷன் (Ben Vision) அச்சகம், 15/5, ஹஸ்கிசன் வீதி).

x, 90 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×16 சமீ., ISBN: 978-955-4628-53-3.

மூதூர் முகைதீன் ஈழத்து இலக்கிய உலகில் நன்கறியப்பட்டவர். பாடசாலை அதிபராகவிருந்து ஓய்வுபெற்றவர். இது இவரது ஐந்தாவது கவிதைத் தொகுப்பு. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு சிறுகதை, கவிதை, பாடலாக்கம் என்று பல்வேறு பரப்புக்களிலும் தடம் பதித்து வருபவர். இவரின் இலக்கியப் பணிக்காக கலாபூஷணம் விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது என்பன இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மரபுக் கவிதை, மரபு மீறிய புதுக் கவிதை என இருவகைப்பட்ட தளங்களிலும் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக, ஒரு வானில் இரு நிலவுகளாக இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. உலகில் உயர்ந்த தமிழ், வல்லமைகள் பெற்றிடுவோம், எழுந்து பார் யுகப்புரட்சி, எனது கவிதை, அற்றைத் திங்களில், உழைக்கும் வர்க்கம், அழிவுகள், தேர்தல் காலம், குருதிக் குளியல், விழித்தெழுவாய், சுகமான தூக்கம், மழைக்காலம், அணில் கடித்த பழம், மரணமும் உறவும், ஒரு வானம் இரு நிலவு, நல்லாசான், உறவுகள், ஊரில் உலாவும் பேய்கள் ஆகிய மரபுக் கவிதைகளும், ‘புதுக்கவிதை படைத்திடுவோம்’ என்ற தலைப்பின் கீழ் ஆசிரியரின் மரபு சாராத கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Spielautomaten Tricks

Content Ghost Slider Tricks Nahrung geben Systemfehler? Merkur Systemfehler Im Wheelz Kasino Abzüglich Bally Wulff Games Im Playzilla Spielsaal Weshalb Merkur Spiele Gratis Online Bestimmen?

Greatest Mobile Ports 2024

Posts Reel rush 5 deposit – What is actually Mobile Gambling establishment And you will Slots Pay By the Mobile phone Expenses? Try Incentives Available