15534 சரமகவிகள்: கவிதைகள்.

 பா.அகிலன். யாழ்ப்பாணம்: பேறு வெளியீடு, 71/2, கச்சேரி-நல்லூர் வீதி, 2வது பதிப்பு, நொவெம்பர் 2012, 1வது பதிப்பு, நொவெம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

(6), 50 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-53902-0-0.

காயம், வலி, இழப்பு, தேகவியோகம் என்பன குறித்து எழுதப்பட்ட சரமகவிகள். ‘சரமகவி’ எனும் தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய மரபை உளவடுவுடன் இணைக்கும் அகிலனின் இத்தொகுப்பு, அதன் தோற்றத்திலும் மொழியிலும் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகம் வெளிப்படுத்தும் போர் அனுபவங்களிலிருந்து பெரிதும் மாறுபட்ட ஒரு தளத்தைக் கட்டமைக்கிறது. பரிச்சயமான சொற்களையும் படிமங்களையும் உடைப்பதன்மூலம் இவருடைய குறுகத் தரித்த கவிதை மொழி உருவாகியிருக்கிறது. போரும், தொடரும் வன்முறைகளும் ஊடாடும் சமகால உலகக் கவிதைகளின் பிரத்தியேகமான, பன்முகத் தன்மை கொண்ட மொழியுலகுடன் இந்தக் கவிதை மொழி தன்னைச் சமாந்தரமாக அடையாளப்படுத்திக்கொள்கிறது. மிதுனம், தலைப்பிடப்படாத காதற் கவிதைகள், சுவிசேஷம், செம்மணி, வைத்தியசாலைக் குறிப்புக்கள், தாயுரைத்தாள், பிற (2005, இரண்டு தலை நகரங்கள், பேராடை, பெருநிலம்: மண்ணடுக்குகள் பற்றிய அறிமுகம், எந்தத் தலைப்பும் இடவேண்டாம், சிலுவை, அருந்தினி, நீர்க்குமிழி ஆகிய தலைப்புகளின்கீழ் இக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16173 நோன்பு தெளிவுகளும் வழிகாட்டல்களும் (இஸ்லாமிய பத்வாக்கள் தொகுதி -2).

எம்.எஸ்.எம்.ஸியாப் (நளீமி). வெலிகாமம்: உரையாடல் தொடர்கிறது, 11, கொஹீணுகமுவ வீதி, புதிய தெரு, 1வது பதிப்பு, மே 2017. (மஹரகம: மில்லெனியம் பிரின்டர்ஸ்). 62 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.,

16920 ஓர் ஒப்பனை இல்லாத முகம்.

ஏ.ரகுநாதன் (மூலம்), எஸ்.கே.காசிலிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: ஜே.ஆர். இன்டஸ்ட்ரீஸ், இல. 7, உடுவில் மகளிர் கல்லூரி மேற்குத் தெரு, உடுவில்).