15601 மெய்ம்மை Fact : கவிதைத் தொகுப்பு.

ஏ.இக்பால். பேருவளை: அல்கலாம் பதிப்பகம், யூசுப் ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2008. (பேருவளை: பொஸிட்டிவ் கிராப்பிக்ஸ்).

xvii, 57 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-50351-1-8.

முற்போக்குச் சிந்தனையில் தடம்பதித்த நாடறிந்த கவிஞரான ஏ.இக்பால், தான் வாழும் உலகத்தையும் தனது காலத்திலுள்ள ஒழுங்கு முறைகளையும் சாதாரண மக்களை விடக் கூர்ந்து கவனிக்கும் கவிஞர். அத்தகைய சமகால வாழ்க்கையை  முற்போக்குத் தடத்தில் நின்று ஆய்வுக்குட்படுத்தும் 14 வசன கவிதைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. அவை முறையே தலைக்கனம், சத்தியம் தான் சத்தியம், கிள்ளுக் கீரைகள், வாடிக்கையாளர் வருத்தம், நீருக்குள் நெருப்பு, மடையராக்கும் மழை, துறவிக்கு ஒரு துணைவி, விண்ணுலகில் அண்ணல் நபி, அவன் நல்லவன், நான் மன்னிப்பதே இல்லை, காரணம் எளிது, விதைத்ததை அறுப்பார், உலகத் தேசியம், மானமிழந்தோர் தானமிழந்தோர் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. இக்கவிதைகள் நேரடியாகவே மிகத் தெளிவாக அவை கொண்டுள்ள கருத்துக்களைப் பரிமாற்றம் செய்கின்றன. நூலின் நுழைவாயில் கவிதையான ‘தலைக்கனம்’ நூலாசிரியரின் முற்போக்குத் தளத்துக்குக் கட்டியம் கூறுகின்றது.

ஏனைய பதிவுகள்

Greatest Real cash Slots On the internet 2024

Articles Greatest On-line casino Video game Possibility Greatest Sweepstakes And you may Personal Gambling enterprises The best On-line casino Earnings 2024 Ignition Gambling enterprise Slots