15665 அப்பாவின் தேட்டம்: சிறுகதைத் தொகுதி.

மலரன்னை (இயற்பெயர்: அற்புதராணி காசிலிங்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

vi, 174 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0958-15-3.

எமது சமூகத்தின் சீர்மியம் பற்றிய சிந்தையுடன் தன் எழுத்துலகை வடிவமைத்துச் செல்லும் மலரன்னை ஏற்கெனவே மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், நான்கு நாவல்களையும் எமக்கு வழங்கியவர். மலரன்னையின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு ஜீவநதி வெளியீட்டகத்தின் 126ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது. இதில் நிமிர்வு, விரியும் சிறகுகள், கோடை நதி, கடமையும் தாய்மை உணர்வும், இது பிரமையா, கண்ணாடிச் சிதறல்கள், உதிரம் எழுதிய சரிதம்,  இதயத் துடிப்பு, சேவை, வெள்ளை மனம், வேலி, தவறான முடிவுகள், அப்பாவின் தேட்டம், வாழ்க்கை ஒரு வட்டம், பசி, பகற்கனவு, வீழ்வதும் எழுவதற்காகவே, விளையும் பயிர், கோபுரமாய் உயர்ந்து, முள்வேலி, மறக்க முடியுமா?, கலைந்த கரு, மனவிலங்கு, மாறும் நியதிகள், வெற்றிடம் ஆகிய தலைப்புகளில் மலரன்னை எழுதியிருந்த 25 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Darmowe Kasyno

Content Strategie Płatności: Które to Najkorzystniejsze Opcje Pozyskuje Ci Kasyno Przez internet? Bądź Ludzie z polski Mogą Mieć na afiszu W całej Kasynie Sieciowy? Porównaj

13438 தமிழ் மொழியும் இலக்கியமும்: செயல்நூல் தரம் 7.

இரா.ஜெயக்குமார். உரும்பிராய்: இரா.ஜெயக்குமார், 68/8, சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்). (5), 136 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ.,