ம.நிரேஸ்குமார். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
xvi, (3), 20-112 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-30-8389-0.
இன்னொரு தைப்பொங்கல், என்ன செய்வாள் சஞ்சுலா?, காற்றுக்கென்ன வேலி, குருவிக்கூடு, சதுரங்கம், செத்துப் பிறப்பவர்கள், சொந்தம், படித்த முட்டாள்களும் படிக்காத மனிதர்களும், புளியமரத்துப் பேய்கள், மூன்று கடிதங்கள், விடியலைத் தேடும் விட்டில் பூச்சிகள், விரக்தி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பன்னிரு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மகாலிங்கம் நிரேஸ்குமார், சாதாரணசிறு சம்பவங்களைக் கூட சுவையான கதையாக சிருஷ்டித்துவிடும் ஆற்றல் கொண்டவர். யுத்த பூமியிலே கந்தகக் காற்றையும், பிண வாடையையும் சுவாசித்து, அல்லோல கல்லோலப்பட்ட மனிதத் தவிப்புக்குள் முளைத்து எழுந்த உயிராக இப் புதிய படைப்பாளியை அடையாம் காண்கின்றோம்.