உ.நிசார் (இயற்பெயர்: எச்.எல்.எம். நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2016. (மாவனல்லை: எம்.ஜே.எம்.அச்சகம், 119, பிரதான வீதி).
xiii, 96 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0503-10-0.
சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் எனப் பல்பரிமாணம் கொண்ட எழுத்தாளரான உ.நிசார் எழுதிய ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு இது. பல்வேறு விதமான அனுபவங்களை வழங்கும் கதைகள். முஸ்லிம் சமூகத்தவரின் இயல்பான உணர்வினை படைப்பாக்கம் செய்வதில் தனித்திறன் கொண்டவர் நிசார். ஆரவாரமில்லாமல் ஆழமான கருத்துகளை இயல்பாக வாசகர் மனதில் இவரது கதைகள் பதிவுசெய்துவிடுகின்றன. இத்தொகுப்பில் உ.நிசார் தான் எழுதிய இரவிலொரு பகல், பூவிதழும் புனிதமும், அன்பளிப்பு, வன்முறைகள், நெருப்பு, விடிவு, பெற்றது குற்றம், ரௌத்திரம் பழகு, சுவர்க்கமும் நரகமும் ஆகிய ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.