15773 கோமதியின் கணவன்.

தா.சண்முகநாதன் (புனைபெயர்: சோக்கெல்லோ சண்முகம்). பதுளை: காந்தி பிரஸ், இல. 24, வார்ட் வீதி, 2வது பதிப்பு, டிசம்பர் 2017, 1வது பதிப்பு, மே 1959. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xx, 75  பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17×12 சமீ.

வீட்டில் வேலைக்காரச் சிறுவர்களுக்கு நடுத்தர வர்க்க சமூகத்தால் இழைக்கப்படும் அநீதிகள், கொடுமைகளைச் சித்திரிக்கும் கதைக்கரு. தாய் தந்தையரை இளமையில் இழந்த சோமு, உறவினர் வீட்டில் வளர்கிறான். அவன் அங்கு பெறும் அனுபவம் கதையாக இங்கு விரிகின்றது. தாயாருடன் சோமு வாழ்ந்த இளமைக்காலத்தில் அவன் செய்த குழப்படிகளை சுவாரஸ்யமான மலரும் நினைவுகளாக்கி, அன்புக்குரிய தாய் இறந்ததும், ஆதரவற்று, மாமன் வீட்டில் தஞ்சம் பெற்று அங்கு மாமியாரின் கொடுமைகளுக்கு உள்ளாகி, அவரும் மாரடைப்பால் மரணிக்க, மாமனின் மகளான கோமதியை  மணந்து பெண் குழந்தை ஒன்றுக்குத் தந்தையாவதாக கதை நகர்த்தப்படுகின்றது. ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளரும் கலைஞருமான தா.சண்முகநாதன் தனது 24 ஆவது வயதில் பதுளையில் வாழ்ந்த காலத்தில் எழுதி வெளியிட்ட கன்னிப் படைப்பாக 1959இல் வெளியிட்ட இந் நாவல் 58 ஆண்டுகளின் பின்னர் மீள்பதிப்புக் கண்டுள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25756).

ஏனைய பதிவுகள்

15889 வாழ்க்கையே ஓர் வரலாறு: அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் நினைவுகள்.

மலர்க்குழு. கொழும்பு: அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் நினைவுமலர்க் குழு, 1வது பதிப்பு, ஜ{ன் 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). v, 6-65, (8), பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.