ம.நிரேஸ்குமார். பத்தரமுல்லை: கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆவது மாடி, செத்சிரிபாய, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (கொழும்பு 10: விஷ்வ பிரிண்டர்ஸ், இல. 534, மருதானை வீதி).
(5), 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-0353-35-4.
இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தின் மூன்றிலொரு பங்கை உழைத்துக் கொடுக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளின் ஒரு பாகமாக, எவராலும் கண்டுகொள்ளப்படாத சிறுவர் கடத்தல்களும், துஷ்பிரயோகங்களும் ம.நிரேஸ்குமாரால் ஒரு குறுநாவலாக எழுதப்பட்டிருக்கிறது. பாடசாலைக்கு அனுப்புவதாகக் கூறி கொழும்பு, யாழ்ப்பாண நகரங்களுக்கு ஏமாற்றி அழைத்துச் செல்லப்படும் தேயிலைத் தோட்டச் சிறார்கள் அங்கு வீட்டு வேலைகளிலும், தோட்ட வேலைகளிலும் எவ்வாறெல்லாம் காவு கொள்ளப்படுகிறார்கள் என்பதை இந் நூல் விவரிக்கிறது. நிஜத்தில் கொழும்பில் கால்வாயொன்றில் இறந்து மிதந்த சுமதி, ஜீவராணி ஆகிய இரண்டு மலையகச் சிறுமிகளை நினைவுறுத்தும் விதமாக, அவர்களைக் கொண்டு சமூகத்துக்கு விழிப்புணர்வைத் தரும் எண்ணத்தோடு இந் நூல் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ம.நிரேஸ்குமார் வடபகுதியைச் சேர்ந்தவர் எனினும், மலையக மக்களின் சமூகப் பிரச்சினைகளைப் பரந்த நோக்கோடு அணுகுகின்ற ஆற்றல் படைத்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67155).