முருகபூபதி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 78 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-645-8.
களனி கங்கையின் கரையோரம் எங்கும் நடந்த கதைகளைச் சொல்லும்
இந்நூல் முன்னர் அரங்கம் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அரசியல், வர்த்தகம், கலை எனக் கலந்து தருகின்ற ஒரு படைப்பு. முன்னர் நாம் அறிந்தும் அறியாமலுமிருந்த பல விடயங்களை இங்கு தொகுத்துத் தந்திருக்கின்றார். ஆற்றின் போக்கையும் வேகத்தையும் ஆங்காங்கே மாற்றியமைக்கும் பாறைக் கற்கள் போல ஆன்மீகம் தொடங்கி ஆடல் பாடல் திரையரங்குகள் வரை ‘அரசியல்’ என்னும் ஒன்று அடிநாதமாக இருந்து ஆட்டிவைப்பதை பக்கங்கள் தோறும் தெரிவிக்கின்றன. தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகளின் இனிய விளக்கங்களுடன் தொடங்கும் பல அத்தியாயங்கள் சிந்திக்கவும் வைப்பதோடு இறுதியில் முகத்துவாரத்தில் போய் நிற்கின்றன. புதுவிதமான கொழும்பு மாநகரை எமக்கு இந்நூல் அறிமுகப்படுத்துகின்றது. இது எழுத்தாளர் முருகபூபதியின் 25ஆவது நூலாகும்.