15812 பவளமணி: கட்டுரைத் தொகுப்பு.

சிவஸ்ரீ தியாக சோமாஸ்கந்தராசக் குருக்கள் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நெல்லண்டையான் வெளியீடு, இல. 90, ஞானவைரவர் வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, ஐப்பசி 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

xviii, 288 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42695-0-7.

தகைசார் வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுடைய பவளவிழாவை முன்னிட்டு 14.10.2015 அன்று வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுதி. இந்நூலில் 19 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவற்றுள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் எழுதிய 14 கட்டுரைகளும் சிவஸ்ரீ தியாக சோமாஸ்கந்தராசக் குருக்கள் எழுதிய கட்டுரையும், மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய கட்டுரையும், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சி.நந்தகுமார் எழுதிய கட்டுரையும், கற்கோவளம் மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் பொ.அரவிந்தன் எழுதிய கட்டுரையும், ஆசிரியர் வேல் நந்தகுமார் எழுதிய கட்டுரையும் அடங்குகின்றன. தொகுப்பாசிரியர் சிவஸ்ரீ தியாக சோமாஸ்கந்தராசக் குருக்கள் நெல்லண்டை பத்திரகாளி அம்மன், வீரமாகாளியம்மன் ஆதீன கர்த்தாவாவார்.

ஏனைய பதிவுகள்

14850 நான் பேசும் இலக்கியம்.

கௌசி (இயற்பெயர்: சந்திரகௌரி சிவபாலன்). ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு, Brinker Höhe 13, 58507 Lüdenscheid, 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி). 128 பக்கம், சித்திரங்கள்,