அருள் செல்வநாயகம். களுவாஞ்சிக்குடி: திருவருள் வெளியீடு, குருமண்வெளி, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம்).
xxxii, (2), 100+53+60+80+101+72+102 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, விலை: ரூபா 500., அளவு: 24×18.5 சமீ.
அருள் செல்வநாயகம் அவர்கள் சுவாமி விபுலாநந்தரின் கட்டுரைகள், சொற்பொழிவுகள், கவிதைகள் முதலான படைப்பாக்கங்களை தாயகத்திலும் தமிழகத்திலும் தேடித் தொகுத்து பத்துக்கும் அதிகமான நூல்களாக வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ஏழு நூல்களின் பெருந் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் விபுலாநந்த அடிகள் (100ப.), விபுலாநந்த அமுதம் (53ப.), விபுலாநந்தத் தேன் (60ப.), விபுலாநந்த வெள்ளம் (80ப.), விபுலாநந்தச் செல்வம் (101ப.), விபுலாநந்த ஆராய்வு (72ப.), விபுலாநந்தக் கவிமலர் (102ப.) ஆகிய நூல்கள் தனித்தனிப் பக்க எண்ணிக்கையுடன் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4120).