J.S.K.A.A.H.. மௌலானா. கொழும்பு 2: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, 9A, பராக் லேன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (Dindigul 624001: Riftha Computer Printers, 229, Westcar Street).
(5), 6-112 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19×13 சமீ.
ஐங்குறுநூறு வரிசையில் பாலைவனம் (பாலைநிலம்) பற்றி இந்நூல் விபரிக்கின்றது. முதலில் அதன் இலக்கணம் எழுதிப் பின்னர் பாடல்களைத் தொடர்கிறார் ஆசிரியர். இளம் வயது முதலே கவிதையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் இதுவரை 8 கவிதைத் தொகுதிகளையும், சித்திரக் கவி நூலொன்றையும், 10 உரைநடை நூல்களையும் திருக்குர் ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு, விரிவுரை உட்பட 6 அறபு-தமிழ் மொழிபெயக்கப்பட்ட நூல்களையும் வழங்கியவர். மாத்தறை மாவட்டத்தில் வெலிகாமம் அருகே வெலிப்பட்டி என்ற சிற்றூரில் பிறந்த நூலாசிரியரின் தந்தை ஒரு மார்க்க மேதையும் இறைஞானியுமாவார். 1963ஆம் ஆண்டு வெலிகாமம் அறபா மத்திய கல்லூரியில் ஆசிரியராக இணைந்துகொண்ட இந்நூலாசிரியர் 1963-1990 காலப்பகுதியில் வெலிகாமம், சிலாபம், புத்தளம், அனுராதபுரம் ஆகிய ஊர்களில் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும், வட்டாரக் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியவர்.