15836 எதிர்க் குரல்கள்: பத்தி எழுத்துக்களும் சில கட்டுரைகளும்.

தேவகாந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

(6), 146 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-59-7.

2000-2020-க்கு இடைப்பட்ட காலக் களத்தில் தேவகாந்தனால் பத்திரிகை, சஞ்சிகை மற்றும் இணையத் தளங்களில் எழுதப்பெற்ற பத்தியெழுத்துக்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. காணாமல் போன ஒரு சிறு பத்திரிகையாளன், பின்நவீனத்துவம் குறித்து, எஸ்.பொ. என்றொரு இலக்கிய ஆளுமை, நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய், மு.த. ஊட்டி கருத்தரங்கு, துக்கத்தின் வடிவம், எதிர்க் குரல்கள், இரண்டாம் புலப்பெயர்ச்சி, இயல் விருது, என் நினைவில் சுஜாதா, மக்கள் கவிஞன், நவீன தமிழிலக்கியத்தில் மிகவுயர்ந்து ஒலித்த பெண்ணியக் குரல், செ.க.வும் நானும், மரணித்த பின்பும், எஸ்.பொ.ஈழத்து இலக்கியத்தின் தன்னேரிலாத் தலைவன், கலை இலக்கியத்தின் விமர்சனக் குரல் ஓய்ந்தது, கொடிது கொடிது மரணம் கொடிது, சபானா, காலம் என்பது, நாட்குறிப்பின் எஞ்சிய பக்கங்கள், இலக்கியமும் அதன் பயனும், இனி நடப்பது நல்லதாகவே நடக்கட்டும், பேராசிரியர் கா.சிவத்தம்பி: ஒரு நினைவுப் பகிர்வு, பக்க எழுத்துக்களும் பக்க விளைவுகளும், கனவின் மீதியைக் கொண்டலைந்த பயணத்தின் முடிவு, ஊர் கூடித் தேரிழுப்போம், கரக்கட்டான், முதல் பிரசவம் ஆகிய 28 பத்தி எழுத்துக்கள் முதற் பகுதியிலும், செ குவேரா: ஒரு வரலாற்றுச் சோகம், அல்பெர் காமு: பிரான்ஸிய இலக்கிய ஆளுமை, அவதார மனிதன் ஆகிய மூன்று கட்டுரைகள்  இரண்டாம் பகுதியிலும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்