இ.இராஜேஸ்கண்ணன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
(6), 133 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-48-1.
வதிரியூர் இ.இராஜேஸ்கண்ணன் அவர்கள் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு. சமூக வரலாற்றாசிரியனாக நாவலாசிரியன்: தெணியானின் நாவல்களை முன்வைத்த புரிதல், சமூக மாற்றத்தை மிருதுவாக வெளிப்படுத்தும் சமூக வரலாற்று ஆவணப் பதிவாக குதிரை வாகனம், புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில்: ஞானம் பாலச்சந்திரனின் பொய்மையும் வாய்மையிடத்து நாவல் குறித்த ஒரு பார்வை, கலையழகோடு இயைந்த சமூக நோக்கெனும் படைப்புப் பக்குவம்: சட்டநாதனின் சிறுகதைகளை முன்வைத்த ஒரு தேடல், விரியத் துடிக்கும் சமூக பண்பாட்டு வரலாற்றுப் பதிவகளாய் தெணியானின் சிறுகதைகள்: மாத்துவேட்டி குறித்தான ஒரு பார்வை, நலிந்தோரின் ஏழைக் குரலாயும் எழுவோரின் புரட்சிக் குரலாயும் நீரில் கிழித்த கோடுகள்: கே.ஆர். டேவிட்டின் எழுபதுகளின் சிறுகதைகளை முன்வைத்த ஒரு பார்வை, உடுவில் அரவிந்தனின் பாழ்வெளி: மிருதுவாய் தூண்டும் மொழியின் வழி பின்னைப் போர்க்காலப் பிரதிபலிப்புகள், வாசக சினேகமான படைப்புகள்: க.பரணீதரனின் அல்வாய்ச் சண்டியன் சிறுகதைத் தொகுதிக்கான ஓர் அறிமுகம், படைப்பாக்க சிரத்தைமிக்க சிறுகதைப் படைப்பாளி புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், பால்நிலை பாரபட்சத்தில் புலனாகாப் பண்பாட்டின் செல்வாக்கு: நிரூபாவின் சுணைக்கிது சிறுகதைத் தொகுதியை முன்வைத்த தேடல், நிகழ்விய வெளிப்பாட்டின் பிரதிபலிப்பு எழுத்தாக நாட்குறிப்பு எழுதலின் சுயசரிதைப் பாணி: அஜந்தகுமாரின் இனிப்புக் கதைகளை முன்வைத்த ஓர் அடையாளப்படுத்தல், அமைப்பாக்கலைக் கேள்விக்குள்ளாக்கும் படைப்புநெறி: மயூரரூபனின் புனைவின் நிழல் குறித்த புரிதல், மரபுநிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமாணம்: த.ஜெயசீலனின் ‘புயல் மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த ஒரு பார்வை, வாழ்வியல் முரண்களால் பேதலிக்கும் வரிகள்: இதயராசனின் நானும் என் தேவதையும் பற்றிய ஒரு வாசக அனுபவம், மூத்தோரின் உலகம் பற்றிய சிறுவர்களின் விமர்சனமான வாழத்துடிக்கும் வடலிகள் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இது 160ஆவது ஜீவநதி வெளியீடாகும்.