15861 தென்னாடுடையவனே எந்நாட்டிலும்.

ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: உதயசூரியன் பதிப்பகம், மாவேற்குடாப் பிரிவு, வள்ளுவன் மேடு, திருப்பழுகாமம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன்; அச்சகம், பிரதான வீதி).

94 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-7300-10-8.

உலகின் தோற்றம், மனித இனத்தின் தோற்றம் போன்றவற்றை பல்வேறுபட்ட கோணங்களிலிருந்து நோக்கியுள்ள ஆசிரியர், அவற்றின் முடிந்த முடிவாக மனித நாகரிகத்தின் தோற்றுவாய் தமிழர் என்பதே என்பதனை தனக்குக் கிடைத்துள்ள தரவுகளின் வாயிலாக இந்நூலில் எடுத்துரைத்துள்ளார். விவிலியம் உலகப் படைப்பினைக் குறித்து பேசுகின்றபோது ஆறு நாட்களில் உண்டாக்கப்பட்டதென எடுத்துரைக்க, சங்க காலப் பரிபாடலில் வருகின்ற வரிகள் விவிலியத்தின்ஆறு நாட்கள் படைப்பினை ஆறு ஊழிக்காலமாக குறிப்பிடுவதாகவும் எடுத்துக்காட்டுகின்றார். தேடலே வாழ்க்கையாக வாழும் ஈழத்தமிழரில் ஆ.மு.சி.வேலழகனும் ஒருவர். இதுவரை முப்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதி வெளியிட்டவர்.

ஏனைய பதிவுகள்