நடராசா சிவசுப்பிரமணியம் (செட்டியார்). யாழ்ப்பாணம்: நடராசா சிவசுப்பிரமணியம், திருமுருகன் மணிமண்டபம், கரந்தன் வீதி, நீர்வேலி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், கஸ்தூரியார் வீதி).
11, 87 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-965-35528-0-8.
நாம் பிறந்தது முதல் ஞானம் பெறுவது வரை வாழ்வின் முன்னேற்றத்தின் படிக்கட்டுகளாக (ஏறுபடியாக) அமைவன ஆசை, துடிப்பு, நிதானம், நீதி, நேர்மை, உண்மை, பொறுமை, விவேகம், அன்பு, பண்பு, பாசம், பக்தி, வாய்மை, தூய்மை, அவதானம் ஆகியனவாகும் என்றும், நாம் என்றும் உயர்ந்து, சிறந்து, சிரித்து, அணைத்து வாழ இப்படிகள் தேவை என்றும் இந்நூலில் தனது வாழ்வனுபவங்களினூடாக சமூகஜோதி, சைவப் புரவலர் நடராசா சிவசுப்பிரமணியம் (செட்டியார்) விபரிக்கின்றார்.