15887 தமிழ் வளர்த்த தீவகச் சான்றோர்கள்: வாழ்க்கை-இலக்கிய-வரலாற்று ஆவண நூல்.

செ.திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: திருமதி விஜயலட்சுமி திருநாவுக்கரசு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2021. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிறின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்புச் சந்தி).

xxiv, 1255 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 2500., அளவு: 25.5×19.5 சமீ., ISBN: 978-955-35879-1-6.

இந்நூலாசிரியர் ஊர்காவற்றுறை (குல சபாநாதன், சோ.சிவபாதசுந்தரம், ஞா.ம.செல்வராசா, சோ.தியாகராஜபிள்ளை, காவலூர் ம.டேவிட் இராஜதுரை, ஆ.சபாரத்தினம், காவலூர் எஸ்.ஜெகநாதன், ஜீவா-நாவுக்கரசன், மா.பாலசிங்கம் ஆகிய 9 பெரியார்கள்), மண்டைதீவு-அல்லைப்பிட்டி (சி.அகிலேஸ்வர சர்மா, பொன் குமாரவேற்பிள்ளை, அங்கையன் அ.வை.கயிலாசநாதன், வெ.அமிர்தலிங்கம், செபஸ்தி அந்தோனிமுத்து, ச.சிவப்பிரகாசம், ஈழமோகன் க.அமிர்தலிங்கம், நா.இராமச்சந்திரன், பண்டிதர் க.வ.ஆறுமுகம், பா.சத்தியசீலன், முத்து தில்லைநாதன், ந.சோதிவேற்பிள்ளை, ச.சேவியர் வில்பிரட், ஆகிய 13 பெரியார்கள்), சரவணை-பள்ளம்புலம் (ஆ.தில்லைநாதப் பலவர், பண்டிதர் இ.மருதையனார், வித்துவான் க.வேந்தனார், தில்லைச்சிவன் தி.சிவசாமி, முகிலன் வ.மாணிக்கவாசகர், சோ.அருண்மொழித்தேவன், பண்டிதர் ச.குமரேசையா, வை.தியாகராஜன் ஆகிய 8 பெரியார்கள்), வேலணை (கோ.பேரம்பலப் புலவர், கா.பொ.இரத்தினம், பொ.ஜெகநாதன், மா.மாணிக்கம், சி.இராசரத்தினம், பொன்னண்ணா பொன்.தியாகராஜா, வி.கந்தப்பிள்ளை, க.இராமலிங்கம்பிள்ளை, செ.கனகசபாபதிப்பிள்ளை, ம.தம்பு உபாத்தியாயர், செல்வி வேதநாயகி தம்பு, ச.சிதம்பரப்பிள்ளை, ச.மகாலிங்கம், மு.திருஞானசம்பந்தபிள்ளை, மு.மயில்வாகனம், அண்ணாதாசன் செ.சச்சிதானந்தன், மலையமான் ச.கிரிவாசன் ஆகிய 17 பெரியார்கள்), புங்குடுதீவு (சி.இ.சதாசிவம்பிள்ளை, சி.ஆறுமுகம், பொன் அ.கனகசபை, க.சிவராமலிங்கம்பிள்ளை, நாவேந்தன் த.திருநாவுக்கரசு, மு.தளையசிங்கம், க.ஈழத்துச் சிவானந்தன், சு.வில்வரத்தினம், சசிபாரதி சு.சபாரத்தினம், வி.சிவசாமி, நாகேசு தர்மலிங்கம், சி.சடாட்சர சண்முகதாஸ், சி.சண்முகம், வே.இ.பாக்கியநாதன் ஆகிய 14 பெரியார்கள்), நயினாதீவு (க.நாகமணிப் புலவர், ஆ.முத்துக்குமாரசுவாமிகள், ஆ.இராமுப்பிள்ளை, கு.ப.சரவணபவன், க.இராமச்சந்திரா, சு.ஐயாத்துரை, வித்துவான் சி.குமாரசாமி, செல்வி சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு, ஈ.வீ. டேவிட்ராஜ் நாக.சண்முகநாதபிள்ளை, நா.சிவராசசிங்கம், நா.விசுவலிங்கம், க.காமாட்சிசுந்தரம், நா.கந்தசாமி, க.குகதாசன் ஆகிய 15 பெரியார்கள்), நெடுந்தீவு (வண.தனிநாயக அடிகள், க.த.ஞானப்பிரகாசம், இளவால அமுது ச.அடைக்கலமுத்து, திருமதி சத்தியதேவி துரைசிங்கம், கி.பி.அரவிந்தன், வை.கனகரத்தினம், யு.று.அரியரத்தினம், சு.சிவநாயகமூர்த்தி ஆகிய 8 பெரியார்கள்), அனலைதீவு-எழுவைதீவு (ஐ.ஆறுமுகம், ப.கணபதி, ஆ.சரவணமுத்துப் புலவர், ஏ.ஆறுமுகம் ஆகிய 4 பெரியார்கள்), காரைநகர்-காரைதீவு (அருளப்ப நாவலர், சங்கீதச் சுப்பையர், கா.முருகேசையர், மு.கார்த்திகேயப் புலவர், கா.நாகநாத ஐயர், கா.சிவசிதம்பர ஐயர், அலன் ஏபிரஹாம், ச.அருணாசல உபாத்தியாயர், ச.கணபதீஸ்வரக் குருக்கள், ச.பஞ்சாட்சரக் குருக்கள், சு.சிவசுப்பிரமணிய தேசிகர், சபாரத்தின ஐயர், த.நாகமுத்துப் புலவர், க.வைத்தீஸ்வரக் குருக்கள், அ.நாகலிங்கம்பிள்ளை, சு.அருளம்பலவாணர், முருகேசனார், ச.சபாபதி, எப்.எக்ஸ். சி.நடராசா, மு.சபாரத்தினம், காரை.செ.சுந்தரம்பிள்ளை ஆகிய 21 பெரியார்கள்) என மொத்தம் 109 தீவகப் பெரியார்களின் வாழ்வும் பணிகளும் பற்றிய கட்டுரைகளை இப்பெருநூலில் தானே எழுதித் தொகுத்திருக்கிறார். இறுதியாக திரு. இ.இ.பூபாலசிங்கம் பற்றிய கட்டுரையொன்றும் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட செ.திருநாவுக்கரசு (24.09.1950) கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக விரிவுரையாளராகவும், பின்னர் பிரதியதிபராகவும், வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். இவர் பண்டிதர், சைவப் புலவர் பரீட்சைகளில் சித்தியெய்தியிருந்ததுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி, முது கல்விமாணி, கலாநிதிப் பட்டங்களையும் பெற்றுக்கொண்டவர்.

ஏனைய பதிவுகள்

14370 கலசம் 2009. இதழாசிரியர் குழு.

கொழும்பு: சாந்த கிளேயார் கல்லூரி, இந்து மாணவர் மன்றம், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை). 155 பக்கம், புகைப்படங்கள், விலை:குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ.