மலர்க்குழு. கொழும்பு: அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் நினைவுமலர்க் குழு, 1வது பதிப்பு, ஜ{ன் 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
v, 6-65, (8), பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.
திருக்கோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வைத்தியர் இளஞ்சிறையன் (நோர்வே), இளம்பிறையன் (விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), மா.சிவகௌரி (ஆசிரியர்), இளங்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையாரின் மறைவையொட்டி 10.06.2019 அன்று வெளியிடப்பட்ட நினைவு மலர் இது. தனது 89ஆவது அகவையில் மறைந்த அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர், வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரது துணைவியார் திருமதி சிவபாக்கியம் அவர்கள் அப்பாடசாலையில் அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும், தந்தை செல்வாவினதும் விசுவாசியாக இருந்த சமூக சேவையாளர் இவர்.