அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியூ, ஏ.டபிள்யூ. அரியநாயகம் (இணைஆசிரியர்கள்). கல்முனை: அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியூ, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (கல்முனை: கோல்டன் ஓப்செட் பிரின்டர்ஸ்).
171 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-44423-2-0.
07.11.2013 அன்று வெளியிடப்பட்ட இந்நூலில் மட்டு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் அடிகளார், முன்னாள் திருமலை மட்டுநகர் ஆயர் எல்.ஆர்.அன்ரனி, யாழ் ஆயர் வ.தியோகுப்பிளளை, மற்றும் ஏ.ஆர்.மன்சூர், வண.எஸ்.ஏ.பிரான்சீஸ், சு.வித்தியானந்தன், கே.நேசையா, வே.கிருஷ்ணபிள்ளை, வண.சகோ.எம்.லொறின்டா, ஆகியோரின் ஆசியுரைகளும், தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் வாழ்க்கைக் குறிப்பும், கலையுலகின் திருமகனே (அருட்செல்வி எம்.ரோச்), இறுதிச் சடங்கு திருப்பலித் திருவுரை (அருள்திரு எம்.மதுரநாயகம் அடிகள்), தமிழ்த் தூது-தவத்திரு தனிநாயகம் அடிகளார் (எப்.எக்ஸ்.சி.நடராசா), Within the bosom of Sri Lanka (F.Neirah (கு.நேசையா), தனிநாயகம் புகழ் வாழ்க (கே.சந்திரசேகரனார்), தமிழுக்கோர் அணிகலன் (அ.ஸ.அப்துஸ்ஸமது), எதிர்க்கட்சித் தலைவரின் இரங்கலுரை (அ.அமிர்தலிங்கம்), தமிழ் வளர்த்த ஈழத் துறவி (பொன்.ஏரம்பமூர்த்தி), தனிநாயக மான்மியம் (கே.யோ.ஆசிநாதர், வித்துவான் வீ.சீ.கந்தையா), வாழ்க வண. தனிநாயக அடிகள் (ஏ.யூ.எம்.கரீம்), Father Xaviour Thani Nayagam the dedicated Tamil Patriot (ஏ.ஜே.வில்சன்), தமிழ் வளர்த்த தனிநாயக அடிகளார் (கே.எல்.ஏ.வாஹித்), தவத்திரு தனிநாயகம் அடிகளாரே (யாழ் ஜெயம்), மறைந்ததோர் மணிவிளக்கு (எம்.பி.ஜோசப்) ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன.