அப்துல் றஹீம் ஜெஸ்மில்;. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 163 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-647-2.
இந்நூல் பொதுவாக இலங்கை முஸ்லீம்களின் நீண்ட வரலாற்றுப் பின்னணியை, குறிப்பாகக் கிழக்கிலங்கை முஸ்லிம்களது வரலாற்றுப் பின்னணியை ஆராய்வதோடு காத்தான்குடி முஸ்லிம்களின் சமூக பண்பாட்டுஅம்சங்களையும் விளக்கமுயல்கின்றது. அதன்மூலம் காத்தான்குடியில் மேற்கிளம்பிய மதத் தூய்மைவாதத்தின் பின்புலத்தையும் தெளிவுபடுத்த முயல்கின்றது. சமகால இலங்கை வரலாற்றில் காத்தான்குடி பெறும் முக்கியத்துவம் யாவரும் அறிந்ததே. கடந்த இரண்டு மூன்று தசாப்த காலத்துள் காத்தான்குடியில் மேற்கிளம்பிய மதத்தூய்மைவாத முரண்பாடுகளும் மோதல்களும் இறுதியாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் யாரும் எதிர்பாராத வகையில் சஹரான் குழுவினர் கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாதத் தாக்குதல்களும் காத்தான்குடியை நோக்கி அனைவரது பார்வையையும் திருப்பின. காத்தான்குடியில் மதத் தூய்மைவாதத்தின் தோற்றம் பற்றிய பல கேள்விகளை எழுப்பின. இந்நூல் காத்தான்குடி பற்றிய எல்லாக் கேள்விகளுக்கும் தீர்;க்கமான பதிலைத் தராவிடினும், பல கேள்விகளுக்கு விடைகாணும் வகையில் காத்தான்குடி பற்றிய ஒரு முழுமையான அறிமுகத்தைத் தருகின்றது எனலாம். காத்தான்குடியின் வரலாறு, கிழக்கிலங்கையின் புராதன வரலாறு, சமூகம், பண்பாடு, இஸ்லாமிய தூய்மைவாதத்தின் பின்புலம் ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது ஆசிரியரின் முதல் நூல். பொது வாசகர்களுக்கும் சமூகவியல் வரலாற்று மாணவர்களுக்கும் இந்நூல் மிகுந்த பயனுடையது. இந்நூலாசிரியர் அப்துல் றஹீம் ஜெஸ்மில்; காத்தான்குடியை வசிப்பிடமாகக் கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றவர். தொல்லியல் திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றுகின்றார்.