16024 புதுவை நாதம் (இதழ் 2).

காஞ்சனமாலா உதயகுமாரன் (இதழாசிரியர்). புத்தூர்: நூலக அபிவிருத்திக் குழு, பொது நூலகம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்).

xx, 132 பக்கம், புகைப்படத் தகடுகள், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ., ISSN: 2714-1578.

வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த முன்னெடுக்கப்படுகின்ற வாசிப்பு மாதச் செயற்பாடுகளில் இந்த சஞ்சிகை வெளியீடானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆக்கங்களுடன் வலி கிழக்கு பிரதேச செயலகமும் வழங்கப்படுகின்ற சேவைகளும் (திருமதி காஞ்சனமாலா உதயகுமாரன், நூலகர்), சித்த சுதேச மருத்துவத்தில் தனித்துவம் கண்ட புத்தூர் செல்லத்துரை (திருமதி காஞ்சனமாலா உதயகுமாரன், நூலகர்), பேண்தகு விவசாயமும் எதிர்கொள்ளும் சவால்களும் (செல்வி சரணிகா சிவசுப்பிரமணியம்), தமிழர் பண்பாடு (புதுவை ஆனந்தன்), தற்கொலை செய்வதற்கான காரணங்களும் அவற்றை குறைப்பதற்கான வழிவகைகளும் (நாகநாதன் சந்திரகுமாரன்), ஆதிசங்கரர் போற்றிய சம்பு நாதேஸ்வரர் (வே.அம்பிகைபாகன்), வரலாற்றுச் சிறப்புமிக்க நெடுந்தீவில் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர்களது சுவடுகள் (பரமு புஷ்பரட்ணம்), யாழ்ப்பாணத்தில் பூர்வீக மக்கள் பயன்படுத்திய சுடுமண் கிணறுகள் (செல்வி ரேணுகா), மந்திரிமனை-யாழ்ப்பாண அரசின் ஒரு நினைவுச் சின்னம் (சசிதா குமாரதேவன்), பின்லாந்தின் கல்விமுறை (இ.கோகுலன்), தாயுள்ளம்-சிறுகதை (சி.சிறிரங்கன்), வாசிப்போம் வாழ்வோம் (கிருஷ்ணசுவாமி அனிதா) ஆகிய ஆக்கங்களும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்