வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 212 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-6164-32-4.
மெய்யியல் வரலாற்றில் இயக்கவியலானது விஞ்ஞானபூர்வமாகப் பகுப்பாய்வு முறையாக-முறையியல் தத்துவமாக வளர்ச்சியடைந்த வரலாற்றை அறிவாராய்ச்சியியல் நோக்கில் விளக்குவதாக இவ்வாய்வு நூல் அமைகின்றது. இயக்கவியலானது விஞ்ஞான முறையின் இயங்கும் உயிராக, உயிர்நிலையாக என்றும் விளங்கும் என கெகலினாலும் பின்னர் மார்க்ஸினாலும் வலியுறுத்தப்பட்ட இம்மெய்யியல் முறையின் கருத்தின் ஏற்புடைமையை அதன் பல்வேறு பரிமாணங்களை ஆராய்வதனூடாக இம்முறை பற்றி வரிந்து கட்டிக்கொள்ளும் தவறான-மிகையான கற்பிதங்களை இந்நூல் தெளிவுபடுத்துகின்றது. இயக்கவியல் பகுப்பாய்வு முறை (அறிமுகம், முரண்பாடு-மாற்றம்-பூசல்), ஆதி கிரேக்க காலம் (கிரேக்கலிட்டஸீவுக்கு முன், கிரேக்கலிட்டஸீவுக்கு பின்), கிரேக்க காலம் (சோபிஸ்ட்டுகள், சோக்கிரட்டிஸ், பிளேட்டோ, அரிஸ்டோட்டில்), புலமைக் காலம் (நவீன மெய்யியற் காலம், பிரான்சியப் பொருள்முதல் வாதிகள், காண்ட் (இம்மானுவேல் காண்ட் 1724-1804), மார்க்ஸ்-கெகல் (கெகல், இயக்கவியல், மார்க்ஸின் அணுகுமுறை), தொகுப்புரை ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.