16038 கெடுவாய் மனனே கதிகேள்: உளவியல்சார் கட்டுரைகள்.

நா.நவராஜ். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

72 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-624-5881-36-9.

கெடுவாய் மனனே கதிகேள், நான் என்ன நரியா?, தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும், கேள்விகளூடு சில கருத்துக்கள், உள்ளத்தனையது உயர்வு, இயந்திரவாழ்வை இலகுவாக்க, ஏடு தூக்கிப் பள்ளியில், வாழ்க்கை என்பது, பிணி தீர்க்கும் பணியில், உள்நோக்கிய தேடல், விழுகையும் எழுகையும், அறிவாளி மூடன் அடிமை, அடக்கப்பட்டதன் விளைவுகள், அந்தரங்கத் துணை ஆகிய 14 உளவியல்சார் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 208ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. நாகேந்திரம் நவராஜ் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைமாணி மற்றும் தமிழ் முதுகலைமாணிப் பட்டங்களைப் பெற்றவர். 2000ஆம் ஆண்டில் இருந்து யாழ்.உளநல சேவைகள் பிரிவில் உளவளத் துணையாளராக இணைந்து செயற்படுகிறார். இந்நூல் 208ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

17781 நவீன விக்கிரமாதித்தன்.

வ.ந.கிரிதரன். தமிழ்நாடு: ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீராம் கொம்பிளெக்ஸ், காந்தி நகர் பிரதான சாலை, வத்தலகுண்டு 624 202, திண்டுக்கல் மாவட்டம், 1வது பதிப்பு, ஜுன் 2023. (சென்னை 600 116: ஐயன் ஏ.கே.எல்