16039 சிக்மண்ட் பிராய்டின் உளவியல் ஆய்வுகளும் போர் பற்றிய அவதானிப்புகளும்.

ஈழக்கவி (இயற்பெயர்: ஏ.எச்.எம்.நவாஸ்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

20 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-43-7.

ஐரோப்பாவில் பாசிச-நாசிச நாசவேலைகள் பரவியிருந்த சூழலில் வாழ்ந்தவர் சிக்மண்ட் பிராய்ட் (1856-1939). அசாதாரண யுத்தத்தின் விளைவுகளை அனுபவித்த சிக்மண்ட் பிராய்ட், யுத்தம் எதற்காக?, யுத்தத்திலிருந்து மீள்வது எவ்வாறு? என்று தன் காலத்தில் உளவியல் ரீதியாக ஆராய முனைந்தார். இந்த ஆய்வு சிக்மண்ட் பிராய்டுக்கும் அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்துக்கூடாக, புதிய பரிமாணங்களைக் காணலாயிற்று. இக்கடிதங்கள் 1933இல் வெளியான ‘போர் ஏன்?” (Why War?)என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சிக்மண்ட் பிராய்டின் உளவியல் ஆய்வுகளும் போர் பற்றிய அவரது அவதானிப்புகளும் இந்நூலில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. 223 ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Wonderful Nugget Bonus Code $1,100 Put Fits

Blogs Mobile experience ‘s the GoldenBet acceptance extra legitimate? Far more online casino information Their games choices comes with harbors, table games, scrape notes, video