16044 அருள் பொழியும் நிழல் தரும் பாதைகள்.

ஜேம்ஸ் ஆலன் (ஆங்கில மூலம்), சே.அருணாசலம் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: அமரர் சுரேஸ்குமார் பவித்திரன் அவர்களின் 45ஆவது நாள் நினைவு வெளியீடு, துவாளி வீதி, உடுப்பிட்டி, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

xxix, 115 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×16.5 சமீ., ISBN: 978-624-98857-0-7.

James Allen அவர்கள் எழுதிய By ways of Blessedness என்ற நூலின் தமிழாக்கம் இதுவாகும். சரியான தொடக்கங்கள், சிறிய கடமைகளும் செயல்களும், பிரச்சினைகளையும் குழப்பங்களையும் சந்தித்து மீள்வது, மனச்சுமையை இறக்கி வைப்பது, உள்ளத்தில் செய்யப்படும் மறைவான தியாகங்கள், இரக்க குணம், மன்னிக்கும் தன்மை, தீங்கில்லாத உலகைக் காண்பது, நிலையான மகிழ்ச்சி ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மனிதனின் வாழ்வுப் பயணத்தை மகிழ்ச்சி மிக்கதாக மாற்றும் சக்தி இந்நூலுக்கு உண்டு. இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தன்னம்பிக்கை ஒளிப்பிரவாகம் பொங்கி வழிகின்றது. உயர் குணாதிசயங்கள் அமுத மொழியில் ஊட்டப்படுகின்றன. தனது 16ஆவது அகவையில் மறைந்த ஹாட்லிக் கல்லூரி மாணவனான அமரர் சுரேஸ்குமார் பவித்திரன் அவர்களின் நினைவாக 21.12.2021அன்று நடந்தேறிய நிகழ்வில் இந்நூல் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

Jimi Hendrix Tragaperras

Articles Added bonus Have And you may Higher Using Signs Jimi Hendrix: Introducing Finest Online casino games Spela Jimi Hendrix Slot Så Här How can