16045 சிந்தனைப்பூக்கள் பாகம் 4.

எஸ்.பத்மநாதன். Canada : எஸ்.பத்மநாதன், Gas Lamp Lane, Markham, Ontario, L6B, 0H7, 1வது பதிப்பு, 2019. (ஒன்ராரியோ: R.G.பிரின்டர்ஸ், ரொரன்ரோ).

(6), xii, 298+20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இந்நூலில்  50 தலைப்புகளில் ஆசிரியரின் உளவியல் கட்டுரைகள் அடங்கியுள்ளன. ‘சிந்தனைப் பூக்கள்” என்ற தொடரில் வெளிவந்துள்ள ஆசிரியரின் நான்காவது நூலாகும். எஸ்.பத்மநாதன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புப் பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். 1971-1979 வரை நுவரெலிய, பண்டாரவளை, பதுளை மாவட்டங்களில் சமூகக்கல்வி ஆலோசகராக கடமையாற்றிய இவர், 1983-1985வரை கோப்பாய்  ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சமூகக் கல்வி விரிவுரையாளராகப் பணியாற்றியபின், 1985இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். ரொரன்ரோ நகரில் வாழ்ந்த வேளை, உளவியல், மருத்துவத் துறைகளில்  கட்டுரைகளை எழுதி தமிழருவி, நம்நாடு, ஈழநாடு, உதயன், செந்தாமரை, விளம்பரம் போன்ற கனேடிய தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியிட்டவர். இவரது பல்துறை ஆக்கங்கள் தமிழர் தகவல், தளிர், தூறல், சஞ்சிகைகளில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இவரது ஆக்கங்கள் ‘சிந்தனைப் பூக்கள்” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு பல பாகங்களாக  வெளிவந்துள்ளன. இவ்வகையில் இது இவரது தொடரின் நான்காவது பாகமாகும்.

ஏனைய பதிவுகள்

Maine Of Tune Betting

Blogs What date is grand national: Top Better off Track Gambling Near Seattle, Arizona Lawmaker Indicates University Athlete Prop Prohibit Inside New york Sportsbook Try