16047 நாம் எவ்வண்ணம் வாழ்ந்தாக வேண்டும்.

இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு. தெகிவளை: இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு, 24 C, எதிரிவீர அவென்யூ, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ.

மாதா-பிதா-குரு-தெய்வம், தெய்வம், நம்பிக்கை, அடக்கம், விருந்தோம்பல், திட்டமிடல், மன ஒருமைப்பாடு, ஆன்மீகம்-பக்தி, பகுத்தறிவு, பஞ்சமாபாதகங்கள் தவிர்த்தல், கலைகள், விதி, இசையியல் ஆகிய 14 தலைப்புகளில் இவ்வான்மீகம் தழுவிய மானிட மேம்பாட்டு நூல் எழுதப்பட்டுள்ளது. இவ்வண்ணம் வாழ்ந்தால் எவ்வண்ணம் வாழ்வில் மிளிரலாம் என வழி முறைகளைக் கூறுகின்றார். நூலாசிரியர் யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியரும், தமிழ்ப் பண்டிதரும், இந்து சாதனம் பத்திரிகையாளரும் முன்னோடி எழுத்தாளருமான மட்டுவிலைச் சேர்ந்த அமரர் ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை அவர்களின் மூத்த மகளாவார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் பிறந்த இராஜேஸ்வரி, யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற இவர், நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் 16 ஆண்டுகள் ஆசிரியையாகவும் அதிபராகவும் பணியாற்றியவர். இவர் ஒரு வீணைக் கலைஞருமாவார்.

ஏனைய பதிவுகள்

Welkomstbonus Zonder Storting! Vinnig noppes bank

Volume Geoogs strafbaar verandert te bonusgeld Wat Kosteloos Spins Worden Er Aanreiken? Paradise Play Casino Verzekeringspremie Geheimschrift Buitenshuis Stortin Watten casino’s geven jou echter eentje

14141 திருநெறித் தமிழ்: வெள்ளிவிழா சிறப்பிதழ் 1998.

சி.நடராசா (இதழாசிரியர்). கொழும்பு 6: ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம், 241-½ W.A.சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஜுலை 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (10), 100 பக்கம்,