16051 சுயநிலைக்கு மீளுதல்: நம்மை நாமே அறிந்து கொள்வதற்கான வழிகாட்டற் குறிப்புகள்.

ஜோசப் கோல்ட்ஸ்ரெயின் (மூலம்), புண்ணியேஸ்வரி நாகலிங்கம் (தமிழாக்கம்). மஹரகம: புண்ணியேஸ்வரி நாகலிங்கம், ஓய்வுநிலைப் பணிப்பாளர், தமிழ் மொழித்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

x, 162 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.

ஜோசப் கோல்ட் ஸ்ரெயின் Joseph Goldstein எழுதிய ‘சுயநிலைக்கு மீளுதல்: தொடர்பாளரின் வழிகாட்டற் குறிப்புகள்” என்ற நூலின் தமிழாக்கம் இது. இந்நூல் தியானத்தை மேற்கொள்ள விரும்பும் யாவருக்கும் பயனுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. ஆர்வத்தைத் தூண்டுவதாயும் அமைந்துள்ளது. தியானம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ளவும், இன்றைய கோவிட் தனிமைச் சூழலில்  நாம் என்ன செய்யவேண்டும் என்பதை சரியாக உணர்ந்துகொண்டு, அறிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டும், எவ்வாறு நாம் எம்மை அறிந்துகொள்வது? எவ்வாறு நாம் நம்மை உணர்ந்துகொள்வது? எவ்வாறு நாம் நம்மைப் பற்றித் தெரிந்துகொள்வது, எவ்வாறு நாம் நமது மன ஆற்றலை அறிந்துகொள்வது? எவ்வாறு நாம் நமது மன ஆற்றலை உச்ச நிலைக்குக் கொண்டு சென்று நாம் நமக்காக வாழ்வது? எமது வாழ்வின் நோக்கம் என்ன? அந்நோக்கத்தை அடையும் வழி எது? போன்ற பல்வேறு வினாக்களுக்கு விடையளிப்பதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்