16055 ஒளவையார் அருளிய கொன்றை வேந்தன் (மூலம், பதவுரை, கருத்துரை, விளக்கவுரை).

த.துரைசிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1B, காலி வீதி, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2022, 1வது பதிப்பு, நவம்பர் 2003. (கொழும்பு 12: பேர்பெக்ட் (Perfect) பதிப்பகம், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

22 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-705-108-6.

ஒளவையார் அருளிய நூல்களில் ஒன்று கொன்றைவேந்தன். கொன்றை வேந்தனில் இடம்பெற்றுள்ள 91 பாக்களும் மக்கள் மனதில் பதித்துக்கொள்ள வேண்டிய நீதி போதனைகளைத் தெளிவாகக் கூறுகின்றன. ஆத்திசூடியில் சொல்லப்படாத அறநெறிகளில் பலவும் இங்கு சொல்லப்பட்டன சிலவும் கொன்றைவேந்தனில்  இடம்பெற்றுள்ளன. இன்றியமையாத அறநெறிகளை, வாழ்க்கை நெறிகளை வலியுறுத்துவதற்காகவே மீளவும் இவை சொல்லப்படுகின்றன. ஆத்திசூடியைப் போலவே இந்நூலும் அகரவரிசைப்படி அமைந்துள்ளது.  இந்நூலுக்குப் பழைய உரைகளும் புதிய உரைகளும் பலவுண்டு. சில பாடவேறுபாடுகள் இருந்தாலும், பெரும்பான்மையாகப் பலரும் ஒத்தே சென்றுள்ளனர். பாடபேதங்கள் விளக்கவுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சங்கநூல்களில் காணப்படும் ஒளவையாரின் செய்யுட்களுக்கும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய நூல்களின் பாக்களுக்கும் சொல்லமைதியில், அமைப்பில், வேறுபாடுகள் பல உள்ளன.  இதன் காரணமாக இந்நூல் பிற்காலத்தில் வாழ்ந்த ஒரு ஒளவையாரால் அருளப்பட்டதாக அறிஞர் பலரும் கருதுகின்றனர்.

ஏனைய பதிவுகள்

17828 கம்பனும் மஹாவம்ஸவும் இராமாயணமும்.

அபிமன்னசிங்கம் சித்தாவத்தை உதயகுமார். சுன்னாகம்: Institute of Historical Studies, சித்தாவத்தை, உடுவில், 1வது பதிப்பு, ஜுலை 2019. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி). xxix, (4), 97